அல்சைமர் – ஒருவகை மறதி நோய்
உலக மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பவைகளில் 6வது இடத்தில் இருப்பது அல்சைமர் ஆகும். அல்ஸைமர் நோய் என்பது நினைவாற்றலில் ஏற்படும் பாதிப்பை குறிப்பதாகும். நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக மறதி நோய் தினமாக அனுஷ்டிக்கபடுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மறதி நோய் குறித்த சில விடயங்களை இங்கே காணலாம்.