அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2016 – காலக்கோடு

உலகின் எந்த நாட்டை சேர்ந்தவர்களாயினும், தங்களுடைய நாட்டின் தேர்தல் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்களோ இல்லையோ, அமெரிக்க தேர்தல் மீதான ஆர்வத்தை வெளிபடுத்த தவறியதே இல்லை. காரணம், உலக வல்லரசு என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதி மறைமுகமாக அனைத்து உலகநாடுகளின் ஜனாதிபதி என்கிற பின்னணியும் எண்ணமுமே ஆகும்.

படம் - i.ytimg.com

படம் – i.ytimg.com

இனி வரும் இரண்டு வருடங்களுக்கு எம்மை ஆட்சிசெய்யப்போகின்ற உலக அரசன் யார்? என்பதிலான ஆர்வத்தில் தவறு ஏதுமில்லை, ஆனால், நவம்பர் 8ம் திகதி இடம்பெறும் தேர்தலில் இறுதி வேட்பாளர்களாக களம்கண்டு, ஜனாதிபதி பதவியை பெறுவதற்கு இந்த வேட்பாளர்கள் எவ்வாறான சோதனைகளை கடந்துவர வேண்டி இருந்தது என்பது தெரியுமா? சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னாக ஆரம்பிக்கின்ற வேட்பாளர் போட்டியே நவம்பர் 8ம் திகதி யார் வெற்றியாளர் என்கிற முடிவுடன் முடிவுக்கு வருகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது, எத்தகைய சவால்களை வேட்பாளர்கள் சந்தித்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

12/04/2015 – எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில்  போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளேன் என்பதனை ஹிலாரி கிளின்டன் (Hilary Clinton) உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார்.

29/04/2015 – ஹிலாரி கிளின்டனுக்கு போட்டியாக ஜனநாயககட்சியின் மற்றுமொரு உறுப்பினரான செனட்டர் பெர்னி சான்டர்ஸ் (Senator Bernie Sanders) தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.

படம் - yt3.ggpht.com

Senator Bernie Sanders – படம் – yt3.ggpht.com

16/06/2015 – நான் உண்மையான பணக்காரன் என்கிற வாசகத்துடன் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) குடியரசுக் கட்சியின் சார்ப்பாக தனது அமரிக்க ஜானதிபதி தேர்தலுக்கான போட்டியிடும் விருப்பத்தை ட்ரம்ப் கோபுரத்திலிருந்து அறிவிக்கிறார்.

07/08/2015 – Fox தொலைக்காட்சி சேவையில் இடம்பெறுகின்ற குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதத்தில், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மூலமாக, டொனால்ட் ட்ரம்ப் அனைவரது கவனத்தையும் தன்பக்கம் திசை திருப்புகிறார்.

காணொளி – GOP Debate

13/10/2015 – முதலாவது ஜனநாயக கட்சியின் பொது விவாதத்தில் செனட்டர் பெர்னி சான்டர்ஸ் (Senator Bernie Sanders) வெளிப்படையாக, ஹிலாரி தொடர்பிலான மின்னஞ்சல் சர்சை தொடர்பில் பேச மறுத்து, கவனத்தை ஈர்க்கிறார். அமெரிக்க மக்கள் இது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை என தன் விவாதத்தை வேறுபக்கமாக நகர்த்துகிறார்.

22/10/2015 – 2012ல் லிபியாவில் தவறுதலாக இறந்த அமெரிக்க வீரர்களின் வழக்கு தொடர்பில், பில் கிளின்டன் சுமார் 11 மணிநேரங்கள் விசாரணைக்கு உள்ளாக்கபடுகிறார். இது ஹிலாரியின் ஜனாதிபதிக்கான பயணத்தில் ஒரு பின்னடைவாக குடியரசு கட்சி சார்பில் விமர்சிக்கபடுகிறது.

07/12/2015 – குடியரசு கட்சியின் முதன்மை ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவிலிருந்து முஸ்லிம்களைத் தடை செய்வேன் என்கிற சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைக்கிறார்.

01/01/2016 – குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான ஜெப் புஷ் (Jeb Bush), விவாத மேடைகளில் டொனால்ட் ட்ரம்ப் உடன் விவாதிப்பதற்கு மேலதிகமாக, அவர் தொடர்பில் கேலி விளம்பரத்தை வெளியிடுகிறார்.

 

20/02/2016 – ஜெப் புஷ் (Jeb Bush) தெற்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஏற்பட்ட தோல்வியின் பின், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறார். இது குடியரசு கட்சியின் முதன்மை வேட்பாளர் நிலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பை மேலும் ஒருபடி நெருக்கமடையச் செய்கிறது.

Jeb Bush படம் - a.abcnews.com

Jeb Bush படம் – a.abcnews.com

16/03/2016 – டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரியவகையில் ஹ்பாக்ஸ் (Fox) செய்தி நிறுவனத்தினால் நடாத்தபடுகின்ற குடியரசுக்கட்சிக்கான விவாதத்தில் பங்குகொள்ள முடியாது என்பதனை அறிவிக்கிறார்.

13/04/2016 – புதிய தேர்தல் கணிப்பீடுகளுக்கு அமைவாக, ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் குடியரசு கட்சி சார்பில் எவர் போட்டியிடினும், அவர்களை வெற்றிபெறக்கூடிய நிலையில் உள்ளார் என்பதனைச்சுட்டிகாட்டுகிறது.

காணொளி – A new electoral-map model finds Hillary Clinton crushing Donald Trump and Ted Cruz

03/05/2016 – குடியரசு கட்சியின் ஜனாதிபதி முதன்மை வேட்பாளர் போட்டியில் டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடி போட்டியாளராக கருதப்பட்ட டேட் குருஸ் (Ted Cruz) இலியானா மாகாணத்தில் ஏற்பட்ட தோல்வியுடன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார்.

12/07/2016 – ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி முதன்மை வேட்பாளர் போட்டியில் ஹிலாரி கிளிண்டனுக்கு கடும் நெருக்கடி தந்த செனட்டர் பெர்னி சான்டர்ஸ் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து விலகுகிறார்.

15/07/2016 – குடியரசு கட்சியின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தனது உபஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸ் (Mike Pence)ஐ  அறிவிக்கிறார்.

18/07/2016 – குடியரசு கட்சியின் ஆதரவுக்கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் துணைவியார் மெலனினா ட்ரம்ப் தனது பேச்சில் 2008ம் ஆண்டு மிச்சல் ஒபாமா தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய பேச்சை மேற்கொள்காட்டி சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்ளுகிறார்.

 

22/07/2016 – விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஜனநாயக கட்சியின் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் காரணமாக ஜனநாயக கட்சியின் உறுப்பினர் Debbie Wassermann Schultz தமது பதவியையும், உறுப்புரிமையையும் இராஜினாமா செய்யவேண்டி ஏற்படுகிறது.

22/07/2016 – சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் விவாகாரம் வெளியான பொழுதில், ஜனநாயக கட்சியின் முதன்மை ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தனது உப ஜனாதிபதி வேட்பாளராக டிம் கெயின் (Tim Kane)ஐ அறிவிக்கிறார்.

28/07/2016 – ஜனநாயக கட்சி தன் சார்பில், ஹிலாரி கிளின்டனை முதலாவது பெண் ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்து வைக்கிறது.

10/08/2016 – புதிதாக வெளியாகும் ஹிலாரி கிளின்டனின் தனியார் மின்னஞ்சல்கள் Clinton foundation தொடர்பிலும், அவரின் சர்ச்சைக்குரிய விடையங்களையும் மீண்டும் பொதுவெளிக்கு கொண்டு வருகிறது.

27/09/2016 – ஜனநாயக கட்சியினதும், குடியரசு கட்சியினதும் முதன்மை ஜனாதிபதி வேட்பாளர்கள் பொதுவெளியில் முதன்முறையாக விவாதம் செய்கிறார்கள். டொனால்ட் தனது உரையில், ஹிலாரியின் மின்னஞ்சல் தொடர்பிலும், ஹிலாரி தனது உரையில், டொனால்ட் தொடர்பிலான பாலியல் சர்ச்சை, இனவாத சர்ச்சை தொடர்பிலும் குற்றம் சாட்டுகின்றனர். விவாத முடிவில் CNN அறிக்கையின் பிரகாரம், கிளின்டன் 57% முன்னணியில் உள்ளார் என்பதை தெரிவிக்கிறது.

07/10/2016 – The Washington Post நிறுவனத்தினால் வெளியிடப்படுகின்ற வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், டொனால்ட் ட்ரம்ப் தொடர்பிலான பெண்கள் மீதான பாலியல் சர்ச்சைகள் உறுதியாகிறது. அதே தினத்தில், விக்கிலீக்ஸ் மூலமாக வெளியிடப்படுகின்ற ஹிலாரி தொடர்பிலான ஆவணங்கள் அவருக்கும் எதிர்மறையான விமர்சனங்களை கொண்டுவந்து சேர்கிறது.

09/10/2016 – இரண்டாவது பொது விவாதமேடையில், ஹிளாரி மற்றும் டொனால்ட் ஆகியோர் பங்குகொள்ளுகிறார்கள். இதன்போது, அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை , அகதிகள் பிரச்சனை , வரி , சுகாதாரத்துறை மற்றும் வேட்பாளர்களின் நேர்மைத்தன்மை தொடர்பில் விவாதிக்கபடுகிறது. இதன் முடிவிலும், ஹிலாரி வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் தங்கள் கருத்து கணிப்பின் மூலம் உறுதி செய்கின்றன.

17/10/2016 – அமெரிக்க அரசுத்துறை உத்தியோகபூர்வமாக அமெரிக்க புலனாய்வுதுறைக்கு கிளாரி கிளின்டன் தொடர்பிலான சர்ச்சைக்குரிய ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றறை வெளியிட அழுத்தம் கொடுக்கிறது. இது பொதுவெளியில், ஹிலாரியின் வெற்றி வாய்ப்பை தேர்தலுக்கு சிலகாலமே உள்ளநிலையில் பாதிப்படைய செய்கிறது.

19/10/2016 –  குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்னதாக இறுதியாக பொதுமேடையில் விவாதித்து கொள்ளுகிறார்கள். பரவலாக சகல விடயங்களும் விவாதிக்கபட்ட நிலையில், இறுதி விவாத வெற்றியாளர் தொடர்பிலான அமெரிக்க ஊடகங்களின் கருத்து கணிப்புக்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக அமைந்தது. பொதுவாக ஹிலாரி முன்னிலை வகித்தாலும், கடந்த விவாதங்களை விட, டொனால்ட் பலபடி முன்னேறியிருந்ததையும் அது சுட்டிகாட்டியது.

06/11/2016 – ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களே மீதமான நிலையில், அமெரிக்க புலனாய்வுதுறையின் இயக்குனர், ஹிலாரியின் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் தொடர்பில் எவ்வகை புதிய ஆதாரங்களையும் கண்டறியவில்லை என்பதை தெரிவித்ததுடன், புதிதாக எந்த குற்றசாட்டுக்களையும் ஹிலாரி மீது சுமத்தவில்லை. இந்த நிகழ்வு, ஹிலாரிக்கு மேலும் ஓர் சாதகமான நிகழ்வாக கருதப்படுகிறது.

08/11/2016 – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாள். வாக்களிப்பு தொடங்கியுள்ள நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் மாநிலத்தின் 12 பேரை கொண்ட நாட்ச் கிராமத்தில் 4 வாக்குகளை ஹிலாரியும், 2 வாக்குகளை ட்ரம்ப்பும் பெற, ஹிலாரி முன்னிலை வகித்துகொண்டிருக்கிறார்.

Related Articles

Exit mobile version