வட சீனாவில் சென் ஹே (பழைய நதி), ஹெனனின் கிராமம் (ஆற்றின் தெற்கு) என்ற இடத்தில்தான் கிபி 602 இல் யுவான் சுவாங் பிறந்தார். அவரின் இயற்பெயர் சென் யி. அந்த ஊரின் மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்த இவர் ஒரு நாள் புகழ்பெற்ற அறிஞராகவும், யாத்ரீகனாகவும் வளருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.சென் குடும்பத்தில் அரசாங்க அதிகாரிகளும், அறிஞர்களும் நீண்ட வரிசையில் இருந்தனர். சென் யியும் அவரது முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்குள்ள அனைத்து பௌத்தர்களுக்கும் இடையில் அவரது தந்தை சென் ஹுய் கன்பியூசியத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மேலும் இந்த சமயங்களில்யுவான் சுவாங்இரு மதங்களையும் ஆய்வு செய்தார். அவரது இரண்டாவது மூத்த சகோதரர் ஜிங் து (புனித மனை) மடாலயத்தில் ஒரு பௌத்த துறவியானார். பௌத்த மதத்தை நடைமுறைப்படுத்தவும், படிப்பதற்காகவும் அங்கு சென்றார்.அதே வருடத்தில், யுவான் சுவாங் வெறும் ஆறு வயது இருக்கும்போதே பௌத்த மதத்தின் இளம் துறவியானார். வழக்கமாககுறைந்தபட்சம் 7 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே புதிதாகத் துறவிகளாக நியமிக்கப்படுவார்கள். எனினும், அவர் கடுமையான சோதனைகளைக் கடந்ததால் விதிவிலக்காக பௌத்த ஒழுங்கிற்குள் நியமிக்கப்பட்டார். யுவான் சுவாங்என்ற பெயரை எடுத்துக்கொண்டார்.அப்போதிருந்து அவர் ஜிங் து மடாலயத்தில் தனது மூத்த சகோதரருடன் படித்தார். வேதாகமத்தில் ஒரே ஒரு முறை ஒரு சொற்பொழிவைக் கேட்டுவிட்டு,அதை மற்றொரு முறை படித்து, முழு வசனத்தையும் அவரால் மனப்பாடம் செய்ய முடியும். அப்போது யுவான் சுவாங் கூறும் ஒவ்வொரு வசனமும் மில்லியன் கணக்கான வார்த்தைகளை உள்ளடக்கியிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவரது தந்தை 611 இல் இறந்த போது, சென் யி மற்றும் அவரது சகோதரர் ஜிங் து மடாலயத்தில் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு சிவானுன் (நான்கு ஆறுகள்) செங்கைக்குச் சென்றுமேலும் படித்து அறிவிலும், பெருமையிலும் தங்களைவளர்த்துக்கொண்டனர். 20 வயதில், யுவான் சுவாங் முழுமையான பௌத்த துறவியானார்.
மேலும் யுவான் சுவாங் ஆய்வு மேற்கொண்டதில் புத்த மதம் சார்ந்த புத்தகங்கள் அதன் தரத்தில் அதிருப்தியைத் தருபவையாக இருந்தது. ஒற்றை வேதாகமத்திற்குப் பல விளக்கங்கள் இருந்தன. மேலும் அவை மிகவும் முரண்பாடாகவும் இருந்தன. வேதங்களின் எந்தவொரு நிலையான பதிப்பும் இல்லை. அந்த காலகட்டத்தில் பௌத்த வேத நூல்களின் மொழிபெயர்ப்பு பெரும்பாலும் இந்தியாவிலும், மற்ற இடங்களிலும் இருந்து வந்தது. மொழித் தடைகள் துல்லியமான மொழிபெயர்ப்பைத் தடுக்கின்றன.ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் உண்மையான புரிதல்களைக் கொள்வதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருந்தனர். புத்தமதத்தின் பல்வேறு கிளைகளும் விளக்கங்களின் செயல்முறையைச் சிக்கலாக்கியது. ஒவ்வொரு கிளையின் சீடர்களும் போதனைகளைப் பற்றி வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவை பல்வேறு பிரிவுகளின் உறுப்பினர்களால் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாக மாறிப் போயின. இதற்கு ஒரு சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றும் உண்மையான புரிதலைப் பெற தாமே நேரிடையாக மேற்கு நோக்கிச் சென்று அசல் புனித நூல்களை பெற்று வர வேண்டும் என்று எண்ணினார்.
யுவான் சுவாங் இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்வதாக அறிந்த துறவி சீன் யுவான் சுவாங்கிடம் “புனித நூல்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்து கொள்ள, நீங்கள் நலாந்தா பல்கலைக் கழகத்திற்கு சென்று அபோட் சில்பாத்ராவின் கீழ் படிக்க வேண்டும்” என்று கூறினார். ஆகையால்,யுவான் சுவாங் இந்தியாவின் நலாந்தா பல்கலைக்கழகத்தை இலக்காகக் கொண்டு பயணிக்கத் தொடங்கினார்.
யுவான் சுவாங் இந்தியாவுக்கு வர தனது பயணத்தில் பல கஷ்டங்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் இந்தியாவை அடைந்த பின்னரும் இங்கிருந்த வெப்ப நிலை, காட்டு விலங்குகள், கொள்ளைக்காரர்கள், நோய்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உதாரணமாகஇந்தியாவை அடைய க்வான் பாஸின் வழியாக யுவான் சுவாங் பயணம் செய்தார். குறுகிய சாலைகளில் பயணித்தது பற்றியும் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டது பற்றியும் இந்தியாவில் உள்ள தனது பயணத்தின்போது யுவான் சுவாங் எழுதி வைத்த வங்காளிகளுடனான சந்திப்புக்கள் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. யுவான் சுவாங்கும் அவருடன் வந்த துறவிகளும் காட்டில் கொள்ளையர்களிடம் சிக்கிக் கொண்டனர். அப்போது அவர்களது உடைகள் மற்றும் உடமைகளைத் திருடர்கள் பறித்துக்கொண்டனர். பின்னர் ஒரு வறண்ட குளத்தில் கொள்ளையர்களால் தள்ளி விடப்பட்டனர். பின்பு அங்கு கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொல்லவும் திட்டமிட்டனர். அதிர்ஷ்டவசமாகஒரு இளம் துறவி அந்தக் குளத்தின் அருகில் ஒரு சிறிய துளை மறைந்திருப்பதைக் கவனித்தார். அந்த இளம் துறவி கொள்ளையர்களுக்கு தெரியாமல் யுவான் சுவாங் யிடம் கூறினார். பிறகு இருவரும் கொள்ளையர்களை திசை திருப்ப விட்டு துளைக்குள் ஊர்ந்து சென்றனர். துளை ஒரு சுரங்கப்பாதை என மாறியது. இருள் வெளிச்சத்துக்கு வழிவகுத்தது. அவர்கள் ஒரு கிராமத்தை வந்தடைந்தனர். அந்த கிராம வாசிகளின் உதவியுடன் அவர்கள் தாங்கள் கடந்து வந்த காட்டிற்கு மீண்டும் சென்று சேற்றுக் குளத்தில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்த தம்முடன் வந்த மற்ற துறவிகளைக் காப்பாற்றினர்.
யுவான் சுவாங் மற்றும் அவரது தோழர்கள் மீண்டும் பயணத்தை மேற்கொண்டனர். இம்முறை அவர்கள் நதிகளைக் கடந்து செல்ல வேண்டும். அவர்களுக்கு மீண்டும் கொள்ளையர்களால் ஆபத்து வந்தது. இப்போது வந்த கொள்ளையர்களுக்கு பணம் மட்டும் போதாது அவர்கள் தெய்வங்களுக்கென்று ஒரு பலமான, ஆரோக்கியமான மனிதனை தியாகம் செய்ய விரும்பினார்கள். இதற்கு யுவான் சுவாங் ஒப்புக்கொண்டார். அவர்கள் மகிழ்ச்சியாக பலிபீடத்தை தயார் செய்தார்கள். அவர்கள் யுவான் சுவாங்கை பலிபீடத்தின் மீது தள்ளி அவரைத் தியாகம் செய்ய தயாராக்கி விட்டார்கள். ஆனால் யுவான் சுவாங் சிறிதளவு கூட கோபமோ, அச்சமோ இல்லாமல் இருந்தார். “நீங்கள் உங்கள் தெய்வங்களுக்கு ஒரு தியாகம் செய்கிற படியால் பொறுமையாயிருங்கள், நான் உங்கள் தெய்வங்களுக்கெல்லாம் சமாதானமாக இருப்பேன்” என்றார். பின்னர் அவர் பலிபீடத்தின் மீது தியானம் செய்தார். போதித்தவர்களின் பெயர்களைக் கோசமிடத் தொடங்கினார். போராடி எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. அவருடைய தோழர்கள் அழுகையும், ஆத்திரமும் அடைந்தார்கள். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. திடீரென இடி மின்னல் ஏற்பட்டு மரக்கிளைகள் விழுந்தன. கொள்ளையர்களின் கப்பல்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது யுவான் சுவாங்கின் நண்பன் இவர் ஒரு துறவி, நீங்கள் அவரைக் கொன்றுவிட்டால், நீங்கள் புத்தரின் கோபத்திற்கு ஆளாவீர்கள்!” என்று தனது கரங்களை பரப்பினார். “நீ உன் சொந்த தெய்வங்களை ஏற்கனவே கோபப்படுத்தியுள்ளாய் என்று உனக்குத் தெரியாதா?”என்று கூறினார். கொள்ளையர்கள் அவர்களது தவறுகளை புரிந்து வேதனை கொண்டனர்.
கோபர் பாஸை கடந்து சென்றபின் பெஷாவரில் பௌத்த மதம் ஒருமுறை செழித்தோங்கியது. காந்தாவின் பெரிய தலைநகரான போர் ஆக்கிரமிப்புக்கள் அழிக்கப்பட்டதன் மூலம் அவர் மிகவும் வருந்தினார். அவர் காஷ்மீரில் வரும்போதே பல இடங்களையும், பௌத்த தளங்களையும் கடந்து சென்றார். 5000 பௌத்த பிக்குகள் கொண்ட பௌத்த மதத்தின் முக்கியமான மையங்களில் இதுவும் ஒன்று. அவர் ஜீலம் ஆற்றின் பள்ளத்தாக்கில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து, புகழ்பெற்ற துறவியின் கீழ் படித்துக்கொண்டிருந்தார். பின்பு அவர் தனது பயணத்தை தொடர்ந்தார், பல இடங்களில் அவர் பயணத்தை நிறுத்தி வைத்தார். இவற்றில் மிகப் பெரிய தலைநகரம் கனாஜி, இது 100 மடாலயங்கள் மற்றும் 10,000 மஹியங்க மற்றும் தாரவாடா பிரிவுகளின் துறவிகளை உள்ளடக்கியது. இங்கே, யுவான் சுவாங் தாரவாடா நூல்களைப் படித்தார்.
அவரது அடுத்த நிறுத்தம் யோகாசாரா பள்ளியின் தாயகமாக இருந்தது. அதில் அவர் ஃபா ஜியாங் பள்ளியைத் தேர்வு செய்தார். யோகாசார் பள்ளி மனதில்தான் உண்மை உள்ளது என்றும் உடல் உட்பட எல்லாவற்றையும் ஒரு மாயை என்றது. பின்னர் அவர் புத்தர் வாழ்ந்த இடங்களைப் பார்வையிட்டார். இறுதியில் நாலந்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றார், அவரது இறுதி இலக்கு நாலந்தா பல்கலைக் கழகம். அதோடு தனது பயணத்திற்கான இலக்கை வெற்றிகரமாக முடித்த யுவான் சுவாங் திரும்பிச் சென்றார் என்கிறது வரலாற்றுப் பதிவுகள்.
உசாத்துணைகள் (References) :
- எனது இந்தியா- S.Ramakrishnan
- Chasing the Monks shadow- Mishi Saran