இந்த கட்டுரையின் விருவிருப்பு குறையாமல் படித்து தெரிந்துகொள்ள இதனை ஒட்டிய முந்தைய கட்டுரைகளை படித்துவிட்டு வாசிக்கத் தொடங்கவும்.
மேலே உள்ள கட்டுரைகளை வாசித்தவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அடுத்த கட்டுரை இதோ…
தந்தையின் சொல் மந்திரம்
பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியம், தன் ஒரே நம்பிக்கையான ஹுமாயூனின் கையில் பொறுப்பை கொடுத்து ஒன்றை மட்டும் கூறி உயிர் விடுகிறார் பாபர். அது என்னவென்றால் ” உன் சகோதர்களை எதிரியாக எண்ணாதே, அவர்கள் உன்னிடம் உண்மையாக இருக்கும் வரை”. அன்பு தந்தையின் வார்த்தை மனதில் ஆழமாக பதிந்துவிட, டிசம்பர் 1530 ஆம் ஆண்டு தனது இருபத்தி மூன்றாம் வயதில் முகலாய பேரரசராக ஆக்ராவில் அமர்கிறார் ஹுமாயூன்.
மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஒரு பக்கம் சந்தோசம் மறுபக்கம் பொறுப்பை தோளில் சுமக்க முடியாமல் திணறுகிறார் ஹுமாயூன். நிர்வாக பிரச்சனை, சீரான ஆட்சி செலுத்த நிதி பிரச்சனை, புதிய பகுதிகளை விரிவாக்குவதில் பிரச்சனை. இப்படி திரும்பும் திசையெல்லாம் பிரச்சனைகள், இதற்கிடையில் இதையெல்லாம் அறிந்த ஆப்கன்கள் வேறுவிதமாக திட்டம் தீட்டுகிறார்கள். இதை அறிந்த ஹுமாயூன் அனைத்திற்கும் ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் தனது சகோதரர்களை வர சொல்கிறார்.
ஏதோ! அவசர செய்தி என்ன சொல்லப்போகிறார் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர் அனைவரும். ராஜ்ஜியத்தை பிரித்து தரப்போகும் செய்தியை ராஜா பிரதிநிதிகள் அனைவரின் முன்பும் கூறுகிறார். இளையவன் கம்ரான் நீ காபூலையும் காந்தஹாரையும் நீ கவனித்துக்கொள், அடுத்த சகோதரன் மிர்ஸா ஹிண்டாலுக்கு அல்வாரயும் மேவாத்தையும் நீ கவனித்துக்கொள், சம்பலை நீ எடுத்துக்கொள் மிர்ஸா அஸ்காரி, என் உடன் பிறக்காவிட்டாலும் நீயும் என் சகோதரனே மிர்ஸா சுலைமான் நீ பாதக்க்ஷனை பார்த்துக்கொள் என மனமார மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ஹுமாயூன்.
சுமைகளை பிரித்து கொடுத்துவிட்டு மேற்பார்வை மட்டுமே ஹுமாயூன் கவனித்தார். இடையில் கம்ரான் தனக்கு வறண்ட பகுதியை எனது சகோதரன் கொடுத்துவிட்டான் இது எனக்கு போதாது என்று லாகூரையும் முல்டானையும் கைப்பற்றி தன் பொறுப்பில் வைத்துக்கொள்கிறார். இதை அறிந்த ஹுமாயூன் சற்றும் கோபம் கொள்ளாமல் தான் சகோதரன் எனது கூடுதல் சுமையை பகிர்ந்துகொண்டான் இதில் தவறேதும் இல்லை என கூற கம்ரானும் என்றுமே தாங்கள்தான் பேரரசர் என துதிப்பாடி தப்பித்துக்கொள்கிறான்.
முகலாய வேடத்தில் சிங்கம்
ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும் தலைமையை மதிக்காமல் ஆக்ராவை சுற்றி இருக்கும் உறவினர்களை சரிசெய்ய நினைத்தார். மறுபுறம் தனித்தனியாக இருக்கும் ஆப்கனியர்கள் ஒன்று கூடிவிட்டால் ஆபத்து, குறிப்பாக ஷேர் கான். ஆம், ஷேர் கான் ஒரு ஆப்கனியர் ஃபரிட் கான் என்பது நிஜப்பெயர். தந்தை ஹசன் கான் ஜவுன்புரில் வாழ்ந்தவர். குதிரை வளர்ப்பாளர். சிறுவயதிலே சித்தியுடன் மனக்கசப்பு ஆகையால் ஜவுன்பூருக்கு உருது, பெர்சிய மொழிகள் கற்க வந்துவிடுகிறார் ஃபரீட் கான். பின்னாட்களில் பீகாரில் ஒரு பகுதியின் தளபதியாக இருந்த ஜமால் கானின் படையில் சேர்ந்து கொள்கிறார். ஒரு சமயம் ஃபரீட், சிங்கம் (ஷேர்) ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி வென்றுவிடுகிறார் அன்றிலிருந்து ஷேர் கான் என அழைக்கப்பட்டார்.
இந்த ஷேர் கான் பாபர் இருந்தபொழுதே அவரின் நன்மதிப்பை பெற்று பீகாரின் பெரும்பகுதியின் தளபதியாக இருந்தவர். தன் வீரம், புத்தி சாதுர்யம் இவைகொண்டு முகலாயர்களை வீழ்த்தவேண்டும் என்பதை எண்ணிக்கொண்டு இருந்தார் ஆனால் தான் முகலாயர்களின் விசுவாசி என வஞ்சகமாக பேசிவிடுவார். இவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட ஹுமாயூன் உடன் இருந்தோர் எச்சரித்தனர் ‘ஷேர் கானை அடக்க வேண்டும் இல்லையேல் ஆபத்து’. ஹுமாயூனும் கோபத்துடன் கிளம்புங்கள் என படைகளோடு கிழக்கு நோக்கி கிளம்பினார். இடையில் 1532 ல் தௌலா என்ற இடத்தில் மஹ்மூத் லோடி மீண்டும் போரிட்டு விரட்ட படுகிறார். பீகாரும், ஜவன்புரும் ஹுமாயூன் வசமானது.
இந்திய கிழக்கு பகுதியின் வாசல் என்றும் ஷேர் கானின் முக்கிய கோட்டைகளில் ஒன்றான சுனார் கோட்டையை முற்றுகை இடுகிறார். நான்கு மாதங்கள் அங்கே இருந்துகொண்டு மற்ற பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தார் இடையில் ஷேர் கான் போரிட நேரில் வருவான் என காத்திருந்தனர் மாற்றாக அவனிடம் இருந்து தூதுவருகிறது. அந்த தூதில் தன் தந்திரத்தை கையாள்கிறார் ஷேர் கான் , என்னவென்றால் சுனார் கோட்டையை மட்டும் விட்டுக்கொடுங்கள் நான் உங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் சாட்சியாக என் மகனை அடிமையாக அனுப்புகிறான். ஹுமாயூனும் அவன் தந்திரம் அறியாமல் சரி என படைகளை ஆக்ராவை நோக்கி திருப்புகிறார்.
மறைமுக எதிரி
ஆனால் ஹுமாயூன் அரியணைக்கு முன்பே அதாவது பாபர் இருந்த பொழுதே, 1526 ல் பகதூர் ஷா குஜராத்தை கைப்பற்றி ராஜபுத்திரர்களின் தலைவனாக வளமான சாம்ராஜ்ஜியத்தை நிறுவி இருந்தார். குஜராத்தை மிக பெரிய வணிக சந்தையாக மாற்ற முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார் பகதூர் ஷா இவருக்கு பக்கபலமாக போர்த்துக்கீசியர்கள் வணிகத்தில் ஆழமாக இறங்கினர். அந்த நேரத்தில்தான் பாபர் இறப்பு, ஹுமாயூன் பதவி ஏற்பு என நிறைய நிகழ்வுகள் நடந்து விட்டது. தனது தளபதிகள் பகதூர் ஷாவின் போக்கையும் குஜராத்தின் வளத்தையும் கூறுகிறார்கள். ஆனால், ஹுமாயூனோ ஓய்வில் நாட்களை கழித்தார் ஒப்பியதில் மிதந்தார். நாடோ நிதிநிலையில் பெரும் பின்னடைவில் இருப்பதுகூட தெரியவில்லை.
ஹுமாயூனின் நிலையை கணித்த பகதூர் ஷா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அஜ்மீரை கைப்பற்றி விட்டார் ஆப்கன் தளபதி பகதூர் ஷா. இதைகூட அறியாமல் டெல்லியில் தின்பனா என்ற கலை நகரத்தை உருவாக்கும் முனைப்பில் இருந்தார் ஹுமாயூன். பகதூர் ஷாவோ அடுத்தது ஆக்ராதான் மிகுந்த உத்வேகத்தோடு தவறான கணக்கு போட்டு இப்ராஹிம் லோடியின் உறவினர் டடார் கான் தலைமையில் நாற்பதாயிரம் வீரர்களை போருக்கு அனுப்புகிறார். போன வேகத்தில் அனைவரையும் பிணமாக்கினர் முகலாய படைகள். இப்பொழுது விழித்துக்கொண்ட ஹுமாயூன் குஜராத் நோக்கி கிளம்புகிறார்.
முகலாய படைகளின் பலம் தெரியாமல் மோதிவிட்டோம் என அஞ்சி சித்தூரில் பதுங்குகிறார் பகதூர் ஷா. ஹுமாயூனோ சிரமம் இன்றி மால்வாவை பிடிக்கிறார். போரிட்டால் வீழ்வோம் என்ற பயத்தில் சித்தூரை காலி செய்துவிட்டு மாண்டு நகரத்தில் பதுங்கினார். ஹுமாயூன் விடுவதாக இல்லை துரத்தினார் மாண்டுவும் வசமானது, குஜாதின் உயர்ந்த கோட்டை சம்பனீர் அதில் பதுங்கினார் பகதூர் ஷா. முகலாயர்களோ செங்கிசுகானின் போர்தந்திரங்கள் பயன்படுத்தி ஏணிகள் சேர்த்து கட்டி உள்ளிறங்க பகதூர் ஷாவோ ஓட்டம் பிடிக்கிறார். அகமதாபாத், கதியவார் என ஓடி இறுதியில் கடலோர டையூவில் போர்த்துக்கீசியர்களிடம் பதுங்குகிறான். பின்தொடர்ந்து வந்த ஹுமாயூன் பரந்துவிரிந்த நீர் பரப்பை பார்த்தவுடன் திகைத்து நின்றார். கடலை பார்த்த முதல் முகலாய பேரரசர் அவரே.
சுமார் நான்கு மாதம் தன் ராஜ்ஜியத்திற்கு தேவையான அளவிற்கு கொள்ளை அடிக்கிறார்கள். வெற்றியை கொண்டாட போதையும் கேளிக்கையும் மிதமிஞ்சி கிடக்கின்றன. முகலாய நிதிநிலையை தக்கவைத்துக்கொள்ள குஜராத் நமக்கு தேவை, அதோடு பகதூர் ஷா இன்னும் சாகவில்லை, நீங்கள் ஒரு வருடமாவது இங்கு ஆட்சி புரியவேண்டும் என்று மந்திரிகள் ஆலோசனை கூறுகிறார்கள். யோசித்து பின் ஹுமாயூன் கூறுகிறார், இங்கே இருந்து விட்டால் ஆக்ராவை யார் பாத்துக்கொள்வது என கூறி சிறிதும் அனுபவம் இல்லாத மிர்ஸா அஸ்காரியை அரியணையில் அமர்த்தி படைகளோடு ஆக்ரா திரும்புகிறார் ஹுமாயூன் .
ஆக்ரா செல்லும் வழியில் மாண்டுவில் ஓய்வு எடுக்கிறார் ஹுமாயூன். நிலைமையை கணித்த பகதூர் ஷா நண்பர்களுடன் சேர்ந்து படைகளை திரட்டி அகமதாபாத்தை கைப்பற்றுகிறார் ஆனால் போதுமான உதவிகள் கிடைக்காத நிலையில் சகோதரர் ஹுமாயூனிடமே உதவி கேட்போம் என யோசித்து பின் சகோதரரை எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தால் ஆக்ராவிற்கு சென்றுவிடுகிறார். செய்தி ஹுமாயூன் காதுக்கு எட்டுகிறது ‘ பகதூர் ஷா மீண்டும் கைப்பற்றிவிட்டானா அஸ்காரி எங்கே போனான்? தூதுவன் அஸ்காரி ஆக்ரா சென்றுவிட்டார் என்று கூறுகிறார் உடனே நிறைய குழப்பங்கள் ஹுமாயூன் மனதில் ஓடுகின்றது, அஸ்காரிக்கு அரியணை ஆசை வந்துவிட்டதா நான் இல்லாத நேரத்தில் ஆக்ராவை கைப்பற்ற நினைக்கிறானா என உரக்க கூறி ஆக்ரா வந்தடைகிறார். ஆனால், ஆக்ராவிற்கு ஒன்றும் ஆகவில்லை நிலைமை அறிந்த ஹுமாயூன் தன் சகோதரரை மன்னிக்கிறார்.
ஹுமாயூன் இருபது மாதங்கள் குஜராத்தை போரிடவும் தக்கவைத்துக்கொள்ளவும் போராடினார் (1534 நவம்பர் முதல் 1536 ஆகஸ்ட் வரை ) போரிடும்போதெல்லாம் மிகுதியான செல்வத்தை கொள்ளை அடிப்பார். கஜானா நிறைந்தாலும் மீண்டும் போருக்கு தயாராகுங்கள் குஜராத் செல்வோம் என்று கூற பகதூர் ஷா இறந்து விட்டதாக செய்தி வருகிறது(1537).
சிங்கத்தின் ஆட்டம் ஆரம்பம்
மேற்கில் கவனம் இருந்தபோது கிழக்கில் பீகாரின் பேரரசராக உருவெடுத்திருத்தர் ஷேர் கான். சுற்றி இருந்த ஆப்கானியர்கள் இணைத்திருந்தனர். படையை வலுப்படுத்தி வைத்திருந்த ஷேர் கான் ஹுமாயூன் வருகைக்கு காத்திருந்தார். விசுவாசியா இருந்த ஷேர் கான் முகலாயர்களுக்கு எதிராக வங்காளத்தை கைப்பற்றி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். வெளிப்படையாக போருக்கு தயார் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
கொஞ்சம் ஓய்விற்கு பிறகு ஹுமாயூன் பெரும் படையை ஒப்பந்த மீறல் காரணமாக சுனார் கோட்டையை முற்றுகையிட இரு படைகளும் மூர்க்கத்தனமாக தாக்கிக்கொண்டனர். முகலாய படை தளபதி ரூமி கான் மாற்று வியூகங்கள் அமைத்து கோட்டையை கைப்பற்றுகிறார் ஆறு மாதங்கள் பிடித்துவிட்டன. அதுவும் சரியான உதவிகள் ஆக்ராவில் இருந்து வந்துகொண்டு இருந்தது. ஷேர் கான் வருவார் என்ற ஹுமாயூன் கணக்கு பொய்த்து போனது. ஷேர் கானோ சுனார் கோட்டையை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பீகாரின் வடகிழக்கில் இருந்த ரோதாஸ் என்ற வலிமையான கோட்டையை கைப்பற்றி குடும்பத்தை தங்க வைத்து போதுமான பாதுகாப்பு செய்துவிட்டு வங்காளம் நோக்கி முன்னேறினர்.
மேற்கு வங்கத்தின் கௌர் நகரை கைப்பற்றி சூறையாடினர் பிகாரி படைகள். நல்ல வளங்கள் ஆசை பெருகிற்று உடனே ஹுமாயூனுக்கு தூது அனுப்புகிறான் ” பேரரசர் ஹுமாயூனுக்கு என் வணக்கங்கள். நான் சமாதானமாக செல்வதையே விரும்புகிறேன். பிகாரை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கு பதிலாக வங்காளத்தை நான் எடுத்துக்கொள்கிறேன், வருடந்தோறும் பத்து லட்சம் தினார் கப்பமாக கட்டிவிடுகிறேன்.ஹுமாயூனுக்கு கண்கள் சிவந்தன இருப்பினும் பொறுமை காத்தார் யோசித்தார்.
ஷேர் கான் சிறந்த தந்திரசாலி என்பதை யூகித்தார் ஹுமாயூன் இருந்தும் உடன் இருந்தவர்கள் அளவு கடந்த வளங்கள் , கடல் வழி வணிகம் இதில் வரும் செல்வம் அனைத்தையும் அவன் வைத்துக்கொண்டு பஞ்சம் நிலைக்கும் பிகாரை நமக்கு தருவதா என குமுறிக்கொண்டு இருந்தனர். இடையில் வங்கத்தின் அரசர் படுகாயத்தோடு காப்பாற்ற சொல்லி ஹுமாயூன் முன்வந்து விழுகிறார். இந்த சம்பவம் அவர் நிதானத்தை தடுமாற செய்து வங்கத்தை நோக்கி படைகளை கிளப்பினார் ஹுமாயூன்.
சாவ்ஸா என்ற இடத்தில் முகாம் அமைக்கிறார். ஷேர் கானோ மிக நேர்த்தியாக ஹுமாயூனின் கள நிலவரங்களை அறிந்து கொண்டு ஒருபோதும் இருவரிடமும் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணி கௌர் நகரை விட்டு பீகாரின் தெற்கு பக்கம் படைகளோடு நகர்கிறார். இதை அறியாத ஹுமாயூன் கௌர் வந்தடைகிறார் அங்கு ஒருவரும் இல்லை அங்குள்ள நிலையை சரிசெய்யவே வாரங்கள் பிடித்தன இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் பிகரை அடைந்த ஷேர் கான் முதல் வேலையாக ஆக்ராவிற்கும் பீகாருக்கும் வரும் பாதைகளை அடைத்துக்கொள்கிறார். அங்கே இருந்த சொற்ப முகலாய வீரர்களை கொன்று அனைத்தையும் தன்வசத்தில் வைக்கிறார் ஷேர் கான். எலிபோல ஹுமாயூன் மாட்டிக்கொள்கிறார். அனைத்து வினியோகங்களும் தடை ஆக்ராவில் என்ன நடக்கிறது என்ற தகவல் ஒன்று கூட வரவில்லை.
இதன் மறுபுறமாக ‘நான்தான் இனி பேரரசர்’ என்று ஆக்ராவின் அரியணையை பிடிக்கிறார் ஹுமாயூனின் சகோதரர் மிர்ஸா ஹிண்டால். மற்றுமொரு சகோதரரான கம்ரானும் ஹிண்டாலை கொன்று அரியணையை பிடிக்க ஆக்ரா நோக்கி வந்துகொண்டு இருக்கிறான். கௌரை அடைந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இனியும் காத்து இருக்க முடியாது என அங்கே ஒருபகுதி படையை நிறுத்தி பின் ஒரு பிரிவினரோடு ஆக்ரா கிளம்பினார் ஹுமாயூன் இடையில் ஆப்கான் வீரர்கள் சிறு சிறு பகுதிகளில் தாக்குதல் நடத்த அதில் இருந்து சமாளித்து பீகாரின் சாவ்ஸா நகரை அடைந்திருந்தார்.
இடையில் ஷேர் கானின் பெரும் படை தயார். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சாவ்ஸாவை விட்டு முகலாய படைகள் புறப்பட்டன அருகில் கர்ம்நாஸா நதிக்கரை. திடீரென நாற்புறமும் சுற்றி வளைத்து ஷேர் கானின் குதிரைப்படை, தாக்குதல் மிக வன்மையாக இருந்தது முகலாய படைகளால் தாக்கு பிடிக்க முடியவில்லை உயிரை பிடித்துக்கொண்டு வீரர் ஓடினர் அதில் ஹுமாயூனும் அடங்குவார். தப்பித்தல் போதும் என்ற மனநிலையில் ஒரு மரத்துண்டை பிடித்து தப்பித்து ஆக்ரா வந்தடைகிறார் ஹுமாயூன். மிக பெரிய வெற்றியில் தன் பெயரை ஷேர் கான்,’ஷேர் ஷா என அறிவித்து கொண்டார்.
நம்பிக்கை துரோகம்
ஆக்ராவில் அரியணைக்கு சண்டை போட்டுக்கொண்ட சகோதரர்களை பார்த்த ஹுமாயூன் மனம் வருந்துகிறார். ஆனால் அவர்களோ எப்படி ஹுமாயூனை துரத்திவிட்டு அரியணையை பிடிப்பது என்ற போக்கிலே இருந்தது. இரண்டு சகோதரர்களும் வாய் வார்த்தைக்காக உதவி வேண்டும் என்றால் படைகளை தருகிறோம் என கூறி அவரவர் நாட்டிற்கே திரும்புகின்றனர். மனம் நொந்துபோன ஹுமாயூன் படைகளை திரட்ட பெரும்பாடு படுகிறார், ஆனால் அதற்குள் ஷேர் ஷா கன்னோஜ் நகரில் படைகளோடு சுற்றி வளைத்துவிட்டதாக தகவல் வந்தது. வேறு வழி இல்லை நேர்கொண்ட போரை நடத்தியே ஆகவேண்டும் இல்லையேல் பாபரின் பொக்கிஷமான இந்த சாம்ராஜ்ஜியத்தை மறந்துவிடவேண்டியதுதான்.
தோல்வியே தெளிவு
1540 மே, கன்னோஜ் நோக்கி ஹுமாயூனின் சொற்ப படைவீரர்கள். சண்டை ஆரம்பமாக ஆரம்பத்திலே முகலாய படைகள் சிதறிவிடுகின்றனர் ஒரு உத்வேகம் இல்லாமல் பயந்து ஓடுகின்றனர். ஷேர் ஷா வீரர்கள் ஒருவரையும் உயிரோட விடுவதாக இல்லை என்ற கண்ணோட்டத்தில் ரத்தம் தெளிக்க கொள்கின்றனர். ஹுமாயூன் போரில் வீரனாக சாக நான் தயார் ஆனால் எனக்கு பின் இந்த சாம்ராஜ்ஜியத்தை யார் மீட்பது என் சகோதரர்களா… அவர்கள் பதவி பேராசை பிடித்தவர்கள் துரோகிகள். இப்பொழுது இங்கிருந்து தப்பித்தல்தான் சரியான முடிவு இந்த நிலை கொஞ்ச நாள்தான் பின் மீண்டும் பாபரின் சாம்ராஜ்ஜியத்தை மீட்பேன் என்று மனதில் நினைத்து தப்பித்து ஆக்ரா வருகிறார் அங்கு கொஞ்சம் செல்வத்தையும் தன் குடும்பத்தையும் பாதுகாப்பிற்காக சிறு படை ஒன்றை அழைத்துக்கொண்டு ஓடுகிறார்.
யாரிடம் உதவி கேட்பது? எங்கே செல்வது என்று புரியாமல் மிகவும் மனா உளைச்சலில் இருந்தார் ஹுமாயூன். ஆழ்ந்த குழப்பத்திற்கு பின் அவரிடம் மனோதைரியம் துளிர் விட்டது…,
Web Title: Humayun Got Betrayed By His Brothers, Tamil Article
Featured Image Credit: shortday