Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

உலக அழகி மானுஷி சில்லரின் பயணம்

சீனாவில் சமிபத்தில் நடந்த உலக அழகி 2017 போட்டியில் கலந்துக்கொண்டு 17 வருடம் கழித்து உலக அழகி பட்டதை வென்று இந்தியாவுக்கு பெருமை செய்த மானுஷி சில்லர் பற்றிதான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம். இதுவரை நீங்கள் எங்கும் படித்திடாத பல சுவாரசியாமான தகவலை இன்று பார்க்க இருக்கிறோம்.

மானுஷி சில்லர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.டெல்லியில் பள்ளி படிப்பை முடித்தார். இவர் தற்போது அங்கு உள்ள பெண்கள் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றார். மானுஷி அவர்களின் தந்தை ஒரு மருத்துவர் ஆவர் அவர் தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு துறையில் விஞ்ஞானிகளாக  பணிபுரிந்து வருகிறார். மானுஷி அவர்களின் தாயார் நீலம் சில்லர் மனித இயல் மற்றும் அங்கக அறிவியல் நிறுவனத்தின் துறையின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார்.

Top Contestants (Pic: newindianexpress)

உலக அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லர் அவர்களின் வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது. உலக அழகி பட்டம் பெரும் ஆறாவது இந்தியப்பெண்மணி என்பது மிகவும் பெருமைக்குரிய செயல் ஆகும். உலக அழகி போட்டியில் பங்குபெறுவதற்கு முன்பு இவர் தனது மருந்து மற்றும் அறுவைச் சிகிச்சை படித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்தில் பத்ம புஷன் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற மாபெரும் நடன கலைஞர்கள் ராஜா மற்றும் ராதா ரெட்டி இவர்களிடம் முறைப்படி குச்சிப்புடி நடனம் பயின்றுள்ளார். மேலும் இவர் தேசிய நாடக மையத்தில் நடிப்பு பயிற்சி எடுத்துள்ளார். இவரது பொழுதுபோக்கு நிச்சல் அடிப்பது, ஓவியம் மற்றும் கவிதை எழுதுவது போன்ற பல திறமைகள் இவருக்கு உள்ளது.

Manushi Kuchupudi Dancer (Pic: zeenews)

மானுஷி சில்லருக்கு ஆங்கிலம் மிகவும் பிடித்த பாடமாகும். இவர் 12ஆம் வகுப்பு படிக்கும்போது CBSE பொது தேர்வில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்தார். மேலும் இவரிடம் உலக அழகி போட்டியில் கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா, உலகிலேயே அதிக சம்பளம் எந்த துறைக்கு கொடுக்க வேண்டும் ஏன் கொடுக்க வேண்டும்? இதற்கு அவர் அளித்த பதில் உலகமே அவரை இன்று திரும்பி பார்க்க வைத்துவிட்டது. அவர் கூறிய பதில், இந்த உலகிலயே அதிக மரியாதை அம்மாவுக்கு  தான் கொடுக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை பணம் முக்கியமில்லை நாம் அவர்கள் மீது செலுத்தும் அன்பும் பண்பும் தான் முக்கியம் என்று கூறி அரங்கத்தின் கைதட்டலை தனக்கு சொந்தமாக்கினார்.

மேலும் இவர் கிராமத்து பெண்களுக்கு உதவும் விதமாக பிரத்யேக திட்டத்தை நடத்தி வருகிறார் இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை அறிவுறுத்தி வருகிறார். இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் பரப்பிவருகிறார்.

Manushi Childhood Image (Pic: Twitter)

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா  சோப்ரா இவர்களது வரிசையில் மானுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார். இதற்காக இவர் தனது ஒரு வருட படிப்பை இழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கு இவரது தாய்-தந்தை உதவியாக இருந்தது இன்று இவருக்கு இந்த பட்டதை வென்று தந்துள்ளது. மானுஷியின் தாரகை மந்திரம் என்னவென்றால் நாம் செய்யபோகும் செயல் மற்றும் நம் மீதும் என்றும் சந்தேகிக்கக் கூடாது என்பது தானம்.

மானுஷி தனது ரோல் மடலாக ரீட்டா ஃபாரியாவை மனதில் கொண்டுள்ளார் ரீட்டா உலக அழகி பெற்ற முதல் இந்திய பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.  2014 ஆம் ஆண்டு ஜப்பானில் ஒரு கலை நிகழ்சிக்காக சென்று இருந்தார் அங்கு அவர் தனது ரோல் மாடல் பற்றி விவாதித்தார். மேலும் இவர் இந்திய அழகி பட்டம் வென்றதுக்கு பிறகுதான் உலக அழகி போட்டிக்கு தன்னை நிலை நாட்டினார்

Miss World Title Winners (Pic: cotilleando)

வெற்றிபெற்று நாடு திரும்பிய மானுஷி சில்லர். தான் உலக அழகி போட்டியில் தாம் கலந்துகொண்டது இன்னும் கனவாகவே உள்ளதாம் மேலும் அவர் கூறுகையில் உலக அழகி போட்டியில் கலந்துக்கொண்டதால் தமக்கு உலகம் முழுவதும் புதிய நண்பர்கள் கிடைத்தனர் என பெருமிதம் கொண்டார்.

தற்போது இவரை தமிழ் சினிமா மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் மானுஷி தமது கல்வியை முடித்துவிட்டு  சினிமா பயணத்தை தொடங்குவார் என்று சினிமா வட்டாரம் கூறுகிறது. எதுவாக இருந்தாலும் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த உலக அழகி மானுஷி சில்லர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் ஒரு மாநிலத்தில் இருந்து வந்து உலக அளவில் இந்திய பெண்களின் பெருமையை நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது.இவரை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. வருங்கலத்தில் நமது நாட்டின் இருக்கும் மகள்களும் தங்களது சிறையை விரிக்க மனுஷி போன்ற பெண்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள்.

Miss World Manushi (Pic: Bilkul Online)

இந்த ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால் அல்லது கூறப்பட்டுள்ள கருத்தில் தவறு இருந்தால் கீழே தயவுசெய்து பதிவு செய்யவும். எங்களது தரத்தை உயர்த்த மிகவும் உதவியாக இருக்கும். மீண்டும் ஒரு சுவாரசியாமான தகவலுடன் சந்திப்போம்.

Features Images Credit:  cotilleando

 

Related Articles