CNN Travel, ஆசியாவின் 18 underrated சுற்றுலுலாத்தளங்களில் ஒன்றாக இலங்கையின் வட மாகாணத்திலமைந்துள்ள யாழ் மாவட்டத்தினை இணங்கண்டுள்ளது. இலங்கைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் மலைநாட்டிற்கு அல்லது தீவின் தெற்கே உள்ள வெப்பமண்டல கடற்கரைகளுக்குச் செல்லவே அதிகம் முனைகிறார்கள், இதனால் அவர்கள் இலங்கையின் ஆச்சரியமூட்டும் ஏனைய பல்வேறு தளங்களை இழக்கிறார்கள் என்பதை CNN Travel எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையின் தமிழ் மக்களின் முதன்மையான தாயகமான யாழ்ப்பாணம் டச்சு காலனித்துவ அம்சங்கள் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கங்களால் உருவான சுவாரசியமான கலாச்சாரத்தைக் கொண்ட தனித்துவமான ஒரு பகுதி என்பதை CNN மேலும் குறிப்பிட்டது.
நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ்ப்பாண நூலகம், மற்றும் யாழ் கோட்டை போன்ற வெவ்வேறு கட்டிடக்கலைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் யாழ், தனது சுவையான கறிவகைகள், ஊறுகாய்கள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான நா கவர் அரிசி உணவுகள் போன்றவற்றால் தங்களை கட்டியிழுத்ததாக பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.