கொழும்பு இஃப்தார் நிகழ்வில் நடப்பவை என்ன? (புகைப்படங்களுடன்)

உலகம் முழுவதும் இஸ்லாம் மதத்தினை கடைபிடிப்பவர்களுக்கு ரமழான் மாதம் என்பது வெறும் நோன்பு என்பதை தாண்டி மிகவும் புனிதமான மாதமும் கூட. நோன்பு காலத்தில் நாள் தவறாமல் நேரம் தவறாமல் மசூதிக்குச் சென்று இறை சிந்தனையோடு ஒன்றியிருப்பதும், இஃப்தார் நடைபெறும் போது, நோன்பு முடித்து உணவு அருந்துவதும், ரமழானை சிறப்பிக்கும் அம்சங்களாகும்.

கொழும்பின் பல பாகங்களில் உள்ள உணவகங்களில் சிறப்பு இஃப்தார் உணவுகள் தயார்செய்யப்படுகிறது. மற்ற சில  இடங்களில் சாலையோர துரித உணவகங்களை நோக்கி மாலை நேரங்களில் வாடிக்கையாளர்கள் விரைகின்றனர். சமீப காலமாக சமூகம் சார்ந்த இஃப்தார் நிகழ்வுகள் விமர்சையாக நடைபெறுகின்றன. இது பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும், மத வேற்றுமைகளையும் உடைத்தெரியும் வலிமை கொண்ட நிகழ்வு எனலாம்.

நோன்பின் போதும் இஃப்தார் சமயத்திலும்,  கொழும்பு வீதிகளில் நிகழ்ந்த நெகிழ்வூட்டும் சில  நிகழ்வுகளையும் மக்களின் பங்கெடுப்பையும் நாமும், நமது குழுவினரும் பதிவு செய்ததை இங்கே உங்களுக்கு தருகின்றோம்.

முஸ்லிம்கள் ரமழான் அல்லாத நாட்களிளும் கூட ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகை செய்கிறார்கள். மசூதிகளில் ரமழான் நாட்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் காணக்கிடைக்கின்றனர். 
Photo Credits: Roar Media / Nazly Ahmed
மசூதியில் குர்ஆன் வாசிக்கும் ஒருவர்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
கொம்பெனித் தெரு மசூதியில் இருந்து தனது தொழுகையை முடித்து செல்லும் ஒரு பெரியவர்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
இலங்கை முஸ்லிம்களுக்கு இஃப்தார் உணவுகளில் “கஞ்சி” என்பது சிறப்பான ஓர் உணவாகும். அனைத்து மசூதிகளிலும் அதிக அளவுகளில் தயார்செய்யப்படும் கஞ்சியானது இஃப்தார் நேரத்தில் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. சமய நம்பிக்கைகளை கடந்து ஏனைய மக்களும் நோன்புக் கஞ்சியை சுவைத்துப்பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுவது வழக்கமான நிகழ்வேயாகும்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
இஃப்தாருக்கு முன்பு கஞ்சி மற்றும் துரித உணவுகள் வாங்கிச்செல்லும் ஒரு பெண்மணி.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
ரமழான் மாதங்களில் சமோசா வகை உணவுகளும் முக்கியமானதே. இஃப்தார் நேரங்களில் சிறு  வணிகர்கள் சாலையோரங்களில் வீட்டில் தயார்செய்த துரித உணவுகளை விற்பனை செய்வதை ஆங்காங்கே அதிகம் காணலாம்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
வீதியோரத்தில் உள்ள கடையொன்றில் உணவு பெறுவதற்காக காத்திருக்கும் தாயும் மகளும்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
வீதியோரத்தில் சமோசா விற்பனை.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.ரமழான் மாதத்தில் குர்ஆன் வகுப்புகள் மற்றும் மசூதி பிராத்தனைகள் முடிவடைந்த பின்னர் சிறுவர்கள் நேசிக்கும் விளையாட்டை விளையாடுவது வழக்கம்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு, ரமழான் மாதத்தில் வேலை கடுமையாக இருக்கும்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
ஈச்சம் பழம்களில் இயற்கையாக இனிப்பு இருப்பதால், அதிக ஊட்டசத்து மிக்க உணவாக கருதப்படுகிறது. எனவே முஸ்லிம்கள் தங்களின் நோன்பை முடித்த பின் உண்ணும் முதல் உணவாக ஈச்சம் பழங்கள் இருக்கின்றன.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
 இந்த ரமழான் பண்டிகையின் போது மிக ருசியான சமோசா வகைகள் அதிகமான இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள சிவப்புப் பள்ளிக்கு வெளியே, ரமழான் மாதங்களில் முஸ்லீம் பெண்களுக்கான மருதாணி, அம்மதத்தினர் பயன்படுத்தும் தொப்பி மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் தமக்கேற்ற ஆடைகள் பாதணிகளை வாங்குவதற்கு காத்திருக்கின்றனர்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இப்தார் நாட்களில் சில முஸ்லிம் கடைகளின் முதலாளிகள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே வீடு சென்று தங்கள் குடும்பத்துடன் உணவு உண்பார்கள். ஆனால் அநேகமான சிறுவியாபாரிகளுக்கு  இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. தொழுகைக்கான அழைப்பு கேட்கும் வேலை புறக்கோட்டையில் இருக்கும் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு ஈச்சம் பழங்கள், தண்ணீர், சில துரித உணவுகள் மற்றும் கஞ்சி வைத்து தங்கள் இஃப்தார் நோன்பை முடித்து மகிழ்கின்றனர்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
சிறு வியாபாரிகள் இருவர் நோன்பை தங்கள் கடைகளிலேயே “கஞ்சி” குடித்து முடித்துக்கொள்கின்றனர்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
கொம்பெனித் தெரு பகுதியில் குடியிருக்கும் வேறு சமூகத்தினரும் அக்கம் பக்கத்தினரும் ரமழான் மாதத்தில்  இஃப்தார் நேரங்களில் மத வேறுபாடின்றி தங்கள் பங்களிப்பினை செலுத்துகிறார்கள்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
சமூகம் சார் இஃப்தார் நிகழ்வின் போது அனைத்து மத குருமார்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
இஃப்தார் பெரும்பாலும் சிறுவர்களுக்கான ஒரு அற்புதமான நேரம். சிறுவர்கள் நோன்பு இருப்பதற்கு  அவசியமில்லை என்றாலும், அவர்கள் வளர்ந்து பருவமடையும் போது ரமழான் நோன்பினை கடைபிடிக்க இந்த இஃப்தார் நிகழ்வுகள் பயிற்சியாக அமைகின்றது.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
இஃப்தார் நேரத்தில் இஸ்லாமியர்களுடன் பிற சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து தங்கள் அன்பை பகிர்வது அனைவருக்கும் மகிழ்வூட்டும் செய்தியாகும்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed

Related Articles

Exit mobile version