கோடைகாலத்திற்கு தேவையான நீரை பெற உதவும் பாலைவனத்து பனிஸ்தூபிகள்!

பாலைவனங்களில் பனிப்பாறைகளா! கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா. பனி ஸ்தூபிகள் எனப்படும் செயற்கை பனிப்பாறைகள், வறண்ட கோடை மாதங்களில் பயன்படுத்த தேவையான புதிய தண்ணீரை சேமிக்க எளிய நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வடிவமைப்புகளாகும். இமயமலை சரிவில் அமைந்துள்ள உள்ள உயரமான மலை-பாலைவனப் பகுதியான லடாக்கில் வசந்த காலத்தில் நடவுச் செய்கைகளுக்கு இந்த பனி ஸ்தூபிகளே முக்கிய நீராதாரங்களாக அமைகின்றன. ஆண்டுக்கு வெறும் 10 சென்டிமீட்டர் மழைப்பொழிவை மட்டுமே பெறும் இப்பகுதியில், பனி ஸ்தூபிகளை நம்பி கிட்டத்தட்ட 300,000 மக்கள் வசிக்கின்றனர். 

இந்த குளிர் பாலைவனப் பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதாரமாக அமைகிறது. ஆண்டுக்கு சில மாதங்களில் மட்டுமே பயிரிடக்கூடிய தட்ப வெப்ப நிலை நிலவும். காலநிலை மாற்றம் காரணமாக, ஏற்கனவே குறுகிய இக்கால இடைவெளி மேலும் சுருங்கி வருகிறது. லடாக் பிராந்தியத்துக்கு முக்கிய நீராதரமாக விளங்கும் இயற்கை பனிப்பாறைகள் புவி வெப்பமடைவதால் வேகமாக உருகி வருகின்றன. இது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையே முற்றிலுமாக சிதைக்கக் கூடிய ஒன்றாகும். 

எனவே பொறியாளர் குழுவொன்று இந்த பிரச்சினைக்கு ஒரு புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். குளிர்ந்த நீரை பெரிய, உயரமான கட்டமைப்புகளில் உறைய வைத்து சேமிப்பது. இவ்வாறு சேமிக்கப்படும் தண்ணீரை வருடம் முழுவதிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக லடாக்கின் பயிர்ச்செய்கை மாதங்களில் இந்த பனிப்பாறைகள் உருகுவதால் கிடைக்கும் நன்னீரைக் கொண்டு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிகிறது. இந்த தொழில்நுட்பததை முதன்முதலில் பொறியாளர் சோனம் வாங்சுக் 2013 இல் உருவாக்கினார்.

அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் கிரையோஸ்பியர் மற்றும் காலநிலை மாற்ற ஆராய்ச்சி குழுவின் ஆராய்ச்சியாளர்கள், இந்திய பல்கலைக்கழகங்கள், லடாக் பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மற்றும் The Ice Stupa திட்டம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து பனிப்பாறைகள் உருகும் பிரச்சினைக்கு திர்வாக இந்த பணி ஸ்தூபிகளை உண்டாக்கினார்கள். அதிலும் குறிப்பாக, நீர் செல்லும் குழாய்களில் நீர் உறைவதைத் தவிர்ப்பதற்கான வழிகளையும், உள்ளூர் நுண் காலநிலை மாற்றம் பற்றிய சிறந்த புரிதலையும் அவர்கள் பிரதானமாக கருதி இப்புதிய தீர்வை உருவாக்கியுள்ளனர். 

Related Articles

Exit mobile version