இரண்டாம் உலகப்போர்

முதலாம் உலகப்போரின் முடிவில் தோன்றிய புது நாடுகள் செக்கோஸ்லோவேகியா, யுகோஸ்லாவியா, லித்துவேனியா, எஸ்டோனியா, லத்வியா, போலாந்து மற்றும் பின்லாந்து. ஆஸ்த்ரியா, ஹங்கேரி தனித்தனி நாடுகளானது. எனினும் ஐரோப்பா கண்டத்தின் பெரிய நாடாக ஜெர்மனி விளங்கியது.  வருடம் 1919 ல் மன்னர் கெய்சர் முடி துறந்த பிறகு ஜெர்மனியின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. ஜெர்மனி ஒரு ஜனநாயக நாடானது. போர் முடிந்து ஜெர்மனி மேல் சர்வதேச சங்கம் சுமத்திய நஷ்ட ஈட்டு தொகை 650 கோடி பவுண்டுகள். இந்த மிகப்பெரிய சுமையால் ஜெர்மனி திணறியது. பணவீக்கத்தின் சதவீதம் மூன்று இலக்கத்தை அடைந்தது. பல லட்சக்கணக்கான மக்கள் வேலையின்றித் தவித்தனர்.

புரட்சியாளர் ஹிட்லர் உதயம்

நாடு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் பொழுது ஆங்காங்கே சில புரட்சியாளர்கள் உதயமானார்கள். அதில் ஒருவர் ஹங்கேரியில் பிறந்தவரான அடால்ப் ஹிட்லர். முதலாம் உலகப்போர் நடந்த பொழுது இராணுவ வீரராக இருந்த ஹிட்லர் தனது பேச்சாற்றலால் மக்களை பெரிதளவில் ஈர்த்து வந்தார். ஹிட்லரின் சொற்பொழிவுக்கு கூட்டம் அலைமோதியது. சுமார் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து பெரும்பாலான ஐரோப்பிய அறிவியலாளர்கள், அறிஞர்களால், ஊடங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று “ஆரிய உயர்வுக்கொள்கை”. ஹிட்லரின் கருத்துக்கள் பெரும்பாலும் இதை மையப்படுத்தியே அமைந்தது. நார்டிக் என்ற இனமே ஆரிய இனம் என்றும் அவர்களே உண்மையான ஜெர்மானியர்கள். அவர்களே நாட்டை ஆள்வதற்கு தகுதியானவர்கள் என்றார்.

ஹிட்லரின் தலைமையில் வருடம் 1920 ல் தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி NSDAP (நாசி கட்சி)  என்ற பெயரில் கட்சி ஒன்றை துவங்கினார். வருடம் 1923 ல் முனிச் நகரில் அதிகாரத்தை கைப்பற்ற ஒரு சிறு சதி ஒன்றில் ஈடுபட்டார். ஆனால் அது தோல்வில் முடியவே ஹிட்லருக்கு 9 மாதங்கள் சிறைவாசம் கிடைத்தது. அந்த சிறைவாசத்தின் பொழுது அவர் “Mein Kempf” என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். சிறையை விட்டு வருடம் 192 4 ல் வெளிவந்த ஹிட்லர் ஜனநாயக முறைப்படி ஆட்சியை கைப்பற்ற முழு வீச்சில் முயற்சிகளை தொடர்ந்தார். அவரது பரப்புரைகள் யூத எதிர்ப்பு, யூத சதி, முதலாளித்துவம், கம்யூனிசம் ஆகியவற்றை விமர்சித்தும் இருந்து வந்தது.

அதே நேரத்தில் மக்கள் அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஒருவருக்காக காத்திருந்தனர். ஜெர்மானிய மக்களின் மனதில் நம்பிக்கை வேரை விதைத்தார். இடதுசாரிகள் கட்சி மேல் மக்களுக்கு இருந்த சில அச்சுறுத்தல்கள் நாஸிக்களின் கட்சிக்கு வராமல் சரி செய்து பலமான கட்சியை உருவாக்கினார். முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றத்திற்கு பொதுவுடைமைவாதிகளும் யூதர்களுமே காரணம் என்று குற்றம் சுமத்தினார். யூதர்கள் மேல் ஆரம்ப காலம் முதலே ஹிட்லர் கோபத்திலும், வெறுப்பிலும் இருந்தார். இதற்கு இனவெறி உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

வருடம் 1933, ஹிட்லரின் கட்சி குறிப்பிடதக்க இடத்தை கைப்பற்றியது. மக்களில் 37 சதவிகிதம் தங்கள் அதிகார மாற்றத்திற்கான தேர்வாக நாஸிக்களை முடிவு செய்தார்கள். ரெய்க்ஸ்டாக் என்ற கட்டிடத்தில் இயங்கி வரும் ஜெர்மன் பாராளுமன்றத்தில் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக ஹிட்லரின் கட்சி உருவானதால் ஹிட்லர் தவிர்க்க முடியாத சக்தியானார்.  ஜனாதிபதி ஹின்டன்பர்க் ஜெர்மனியின் வேந்தராக (முதல்வர்) ஹிட்லருக்கு ஜனவரி 30, 1933 அன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஹிட்லர் வேந்தராக பதவியேற்ற சில நாட்களிலே ஜெர்மன் பாராளுமன்றம் சிலரால் தீக்கிரையானது. பதற்றத்தை காரணம் காட்டி ஜனாதிபதியிடம் அவசர நிலை கோரினார் ஹிட்லர். அவசர நிலை அமுலுக்கு வந்ததும் அனைத்து கட்சிகளின் செயல்பாடுகளையும் முற்றிலுமாக தடை செய்தார் ஹிட்லர். அடுத்த ஒரு வருடத்தில் (ஆகஸ்ட் 2, 1934) ஜனாதிபதி ஹின்டன்பர்க்’கை மரணம் கவ்வி கொண்டது. அடுத்த ஜனாதிபதியை நாடு எதிர்நோக்கி நிற்கின்ற சமயத்தில் ஒரு குரல் அசரீரியாக ஒலித்தது, “இனி ஜெர்மனி நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தைக்கே இடமில்லை”. அது வேறு யாருமில்லை, ஹிட்லரின் குரல் தான். ஹிட்லர் தன்னை ஜனாதிபதியாக அறிவித்து பதவியேற்று கொண்டார். ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளராக மாறினார் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற உடன் ஆரியக்கொள்கை முன்னிலை படுத்தப்பட்டது. ஆரியர்கள் இனமே உயர்ந்த இனம். பிற இனங்கள் அனைத்தும் அடிமை இனம் என்ற கோட்பாட்டில் நடத்தப்பட்டனர்.

Hitler (Pic: meet-thelocals)

கொலை முகாம்கள்

யூதர்களுக்கான வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டது. யூதர்கள் அனைவரும் ஜெர்மனியை விட்டு வெளியேற உத்தரவு இருந்தது. சில வருடங்களில் அந்த உத்தரவை ரத்து செய்து அவர்களை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஜெர்மனி அரசு “யூதர் பிரச்சனைக்கான இறுதித் தீர்வு அவர்களை அழிப்பது தான்” என்றொரு முடிவெடுத்தது. தினசரி பல்லாயிரக்கணக்கான யூதர்கள் நச்சு புகையிட்டும், துப்பாக்கி சூடு, தூக்கு உள்ளிட்ட பல விதமான வழிகளில் கொல்லப்பட்டனர். இதில் ஏறத்தாழ 6௦ லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்காக சிறப்பு முகாம்கள் அமைத்துள்ளனர். கொத்து கொத்தாக யூதர்களை அழைத்து சென்று அந்த கோரம் அரங்கேறியது. இதில் பெண்கள், உடல் ஊனமுற்றோர் என்ற பாகுபாடில்லாமல் நடந்துள்ளது.

Quarrels (Pic: meet-thelocals)

புரட்சியாளர் ஸ்டாலின் மற்றும் முசோலினி

சோவியத் யூனியனில் இதே சமயத்தில் புரட்சியாளர் ஸ்டாலின் தலைமையில் ஒரு பெரும் கம்யூனிச சக்தி உருவாகிக்கொண்டிருந்தது. இது ஹிட்லரின் பாசிச கொள்கைக்கு ஒவ்வாதது, எதிரும் புதிருமானது. ஆனால் இத்தாலி ஒரு பாசிச நாடு. முசோலனி தலைமையில் இருந்த இத்தாலி ஜெர்மனிக்கு முழு ஆதரவு அளித்தது. அக்டோபர் 25, 1936 அன்று நாஸிக்களின் ஜெர்மனியும், பாசிச இத்தாலியும் இதற்கான ஒப்பந்தத்திற்கு வந்தனர். பின் ஒரு வருடத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் கம்யூனிச கொள்கைகளுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தது. இவை அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டது.

Stalin (Pic: businessinsider)

ஜப்பானின் வல்லரசு கனவு

ஜப்பானில் ஹிரோஹிடோ என்ற மன்னரின் ஆட்சி நடந்து வந்தது. ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக மாறிவிட ஜப்பான் தசம வருடங்களாக நாடுகளின் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வந்தது. வருடம் 1937, ஜப்பான் சீனா மீது போர் தொடுத்தது. சீனா ஒரு குடியரசு நாடு. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஜப்பான் முன்னரே அதன் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தது. இந்தோ-சீனா என்றழைக்கப்பட்ட வியட்நாம், கம்போடியா லாவோஸ் மற்றும் தாய்லாந்து, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அனைத்தும் ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்தது.

ஹிட்லர் முதலாம் உலகப்போரில் ஐரோப்பா இழந்த பகுதிகளை மீட்டெடுக்க ஆயுத்தமானார். ஹங்கேரியை ஜெர்மனியுடன் இணைத்துக்கொண்டார். போலந்து நாட்டின் மேல் ஜெர்மனி போர் தொடுத்தது. தொடங்கியது இரண்டாம் உலக யுத்தம். ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் அச்சு நாடுகள் ஒரு அணி. சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நேச நாடுகள் ஒரு அணியாகவும் இருந்தது.

Japan Battalian (Pic: pinterest)

செப்டம்பர் 1, 1939 – இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நாள்

தனது பூர்விக பகுதிகளான போலந்து நாட்டை மீண்டும் தமதாக்கி கொள்ள ஜெர்மனி போலந்து மீது படையெடுத்தது. போலாந்திற்கு ஆதராவாக பிரான்ஸ் போரில் ஈடுபட்டது. பிரான்ஸிற்கு ஆதராவாக பிரிட்டன் களமிறங்கியது.

ஏப்ரல் மாதத்தில் ஜெர்மனி தமது படையெடுப்பின் மூலம் டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளை கைப்பற்றியது. இதன் பின்னர் ஜெர்மனி மின்னல் வேக தாக்குதலிற்கான “பிளிட்ஸ்கிரீக் “ என்ற யுத்தி ஒன்றை கையாண்டது. இதன் மூலம் அது பல வெற்றிகளை கண்டது. மேற்கு ஐரோப்பாவின் பகுதிகளான நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றை கைப்பற்றியது. வடக்கு பிரான்ஸ் பகுதியை ஜெர்மனி கைப்பற்ற பாதி பிரான்ஸ் ஜெர்மனி வசம் வந்தது. இதையடுத்து நாஸிக்களிடம் சரணடைந்து பிரான்ஸ்.

வின்ஸ்டன் சர்ச்சில்

அதே வருடத்தின் மே மாதம் பிரிட்டன் அரசின் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில் பொறுப்பேற்றார். பின்பு அச்சு நாடுகளின் உறுப்பினரான இத்தாலி போரில் களமிறங்கியது. இப்பொழுது பிரிட்டன் மட்டும் தனித்து ஜெர்மனியை எதிர்கொண்டது. ஜெர்மனி பிரிட்டன் மேல் வான்வழி தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தில் பலத்த சேதங்களை பிரிட்டனிற்கு அளித்தது. ஆனால் பிரிட்டனை கைப்பற்ற முடியவில்லை.

அச்சு நாடுகள் போர் ஒப்பந்தம்

செப்டம்பர் 22, 1940 அன்று அச்சு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய மூன்றும் ஒரு கூட்டு ஒப்பந்தத்திற்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் படி ஒரு நாடு பாதிக்கப்பட்டால் மற்ற இரு நாடும் அவர்களுக்கு ஆதரவாக போரில் இறங்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் கையெழுத்திடப்பட்டது.

சோவியத் யூனியன் மோதல்

ஜெர்மனியுடன் இணைந்து அச்சு நாடுகள் அனைத்தும் சோவியத் யூனியன் மேல் மிகப்பெரிய படையை ஜூன் 22, 1941 அன்று களமிறக்கியது. ஏறத்தாழ நாற்பது லட்சம் போர் வீரர்கள் போரிட்டனர். இதற்கு காரணம் ஜெர்மனி போரிட்டு மீண்டும் கையகப்படுத்திய ஐரோப்பாவின் நாடுகளான போலந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளையும், பால்டிக் நாடுகளையும் சோவியத் யூனியன் கைப்பற்றியது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பியர்ல் ஹார்பர்

இதனிடையே பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராக இருந்த சமயம். நேச நாடுகளுக்கு ஆதரவளித்து ஜப்பானிற்கு ஒரு சில சிக்கல்களை கொடுத்து கொண்டிருந்தார். வருடம் டிசம்பர் 7, 1941 ல் அதற்கு பதிலடி தரும் விதமாக ஜப்பான் அமெரிக்காவின் கடற்படை தளமான பியர்ல் ஹார்பர் மேல் ஜப்பான் குண்டுகளை வீசியது. மறுநாள் அமெரிக்கா நேரடி யுத்தத்தில் குதித்தது.

அமெரிக்கா உள் நுழைந்ததும் அச்சு நாடுகளின் வீழ்ச்சி தொடங்கியது. பியர்ல் ஹார்பர் சம்பவம் நடந்து அடுத்த ஆறு மாதங்களில் (வருடம் 1942) ஜப்பான் கடற்படையை மற்றொரு தளத்தில் சந்தித்து அமெரிக்க கடல்படை வீழ்த்தியது.

இத்தாலியின் வீழ்ச்சி

வருடம் 1943, இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைந்தது. எனினும் ஜெர்மனி முசோலினியை காப்பாற்றி வடக்கு இத்தாலியில் அவர் அரசமைக்க உதவியது. வருடம் 1944, நேச நாடுகள் பிரான்ஸை கைப்பற்றியது. ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பாரிஸ் விடுவிக்கப்பட்டது.

ஜெர்மனியின் வீழ்ச்சி

ஜெர்மனியை நேச நாடுகள் சூழ்ந்து கொண்டது. சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் என்று பல முனை தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெர்மனி சரணடைந்தது. வருடம் 1945, ஏப்ரல் 28, அன்று முசோலினி தூக்கிலிடப்பட்டார். இரு தினங்களுக்கு பிறகு வருடம் 1945, ஏப்ரல் 30 அன்று அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஐரோப்பாவில் போர் முடிவிற்கு வந்தது.

World War Scene (Pic: youtube)

அணுகுண்டு வீச்சு

அமெரிக்காவின் ரூஸ்வெல்ட் மரணமடைந்தார். இதன் பின் ஜனாதிபதி பொறுப்பேற்றவர் ஹாரி ட்ரூமேன். இதன் பின்பு அமெரிக்கா ஜப்பான் மோதல் முற்றியது. அமெரிக்கா ஜப்பான் மேல் தொடர் தாக்குதலில் இருந்தது. இறுதியாக ஜப்பான் மேல் ஆகஸ்து 6, 1945 மற்றும் அகஸ்து 9, 1945 அன்று இரு அணுகுண்டுகள் வீசப்பட்டது. ஜெர்மனி அணுகுண்டுகளை தயாரித்தாலும் அதற்கான பரிசோதனையில் ஈடுபடவில்லை. அமெரிக்கா அதற்கான களமாக ஜப்பானை பயன்படுத்திக் கொண்டது. “லிட்டில் பாய்” (LITTLE BOY) மற்றும் “ஃபேட்மேன்”  (FAT MAN) என்று அணுகுண்டுகளுக்கு பெயரிடப்பட்டது. விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டின் தீ ஜுவாலைகள் சுமார் 2௦0௦ அடிக்கு மேலாக எழும்பியது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரழந்தனர். ஜப்பான் நேச நாடுகளிடம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது. அந்த அணுகுண்டு கதிர்வீச்சின் தாக்கம் சுமார் பத்தாண்டுகள் வரை நீடித்தது. இந்த குண்டு வெடிப்புகளின் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அமெரிக்கா அதை நியாயப்படுத்தியது.

அச்சு நாடுகளுக்கு துணையாகவும், நேச நாடுகளுக்கு துணையாகவும் பல்வேறு நாடுகள் தோள்கொடுத்து போரிட்டனர். சுமார் 30 நாடுகள் இந்த போரில் பங்கு பெற்றனர். இந்தியா போரிடும்படி பிரிட்டன் கேட்டபொழுது நாடு சுதந்திரம் அடையாமல் போரிட தயாரில்லை என்று அன்றைய காங்கிரஸ் மறுத்துவிட்டது. எனினும் இந்திய தேசிய காங்கிரசின் அனுமதி இல்லாமல் பிரிட்டிஷ் இந்தியப்படை போரிடும் என்று அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் வருடம் 1939ல் அறிவித்தார். அதிகபட்சமாக வருடம் 1945 வரை சுமார் 25 லட்சம் வீரர்களும், தன்னார்வர்களும் போரிட்டனர். பிரிட்டிஷ் அரசு 17 விக்டோரியா க்ராஸ் விருதுகளை இந்தியர்களுக்கு வழங்கி கவுரவித்தனர். போரில் சுமார் 85, ௦0௦ இராணுவ வீரர்கள் மாண்டனர்.

Atom Bomb (Pic: history)

மீண்டும் வருமா உலகப்போர் ?

இறுதியாக, இரண்டாம் உலகப்போரில் பல நாடுகளை சேர்ந்த சுமார் 5 கோடி மக்கள் உயிரிழந்தனர். இது தவிர சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் போர் தொடர்பான நோய்கள், உடல் உறுப்பு செயல் இழத்தல் போன்ற காரணங்களினால் பாதிக்கப்பட்டனர். “ஆதிக்கம்” என்ற வார்த்தை இல்லாமல் அரசியல் இல்லை. நாடுகளுக்குள் ஆனாலும், நாடுகளுக்கு வெளியில் ஆனாலும் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. அது வெறியாக மாறும்பொழுது போர் வெடிக்கிறது. இன்றும் நாடுகள் காலனியாதிக்கத்தில் தான் இருக்கின்றது. அன்று தோல்வியடைந்த சர்வதேச சங்கம் இன்றைய “ஐநா சபை”. அமெரிக்காவின் ஆதிக்கத்தில். தண்ணீரால் தான் போர் வரும் என்று கணித்த கதைகள் உண்டு.

Water (Pic: pixabay)

மீண்டும் உலகப்போர் ஒன்று வந்தால் அது நிச்சயம் உலகபேரழிவாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. வராத போருக்கு இரவு பகலாக நாடுகள் ஆயுதம் தயாரிப்பதும், பலத்தை நிருபிப்பதும், மிரட்டுவதும் முற்றுப்பெறாத தொடர்கதை தான். போர் வரக்கூடாது என்ற நம்பிக்கையில் நாமும் காத்திருப்போம்!!

Web Title: Video Second World War

Featured Image Credit: meet-thelocals

Related Articles

Exit mobile version